+2 மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக வாட்ஸ் அப் மூலம் அலகுத்தேர்வு!

வாட்ஸ் அப் வழி தேர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு

1. +2 மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த வாட்ஸ் அப் மூலம் அலகுத் தேர்வு - அரசு தேர்வுகள் இயக்ககம்

2. வாட்ஸ் அப்பில் மாணவர்களுக்கு தனியாகவும் மாணவிகளுக்கு தனியாகவும் குழு அமைக்க வேண்டும்

3. வாட்ஸ் அப் குழுவில் தேர்வுக்கான வினாத்தாள்களை அனுப்ப வேண்டும்; விடைத்தாளில் பெயர், பதிவு எண் கட்டாயம்

4. மாணவர்கள் விடையை தனி தாளி எழுதி பெற்றோர் கையொப்பம் பெற்று PDF ஆக அனுப்ப வேண்டும்

5. ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும்

6. வாட்ஸ் அப் குழுவில் வேறு செய்திகள், வீடியோக்களை அனுப்பக் கூடாது