தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், வருகிற ஜூலை 6 ஆம் தேதி முதல்வர் தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வசதி இல்லாத காரணத்தால் கல்வி தொலைக்காட்சி மூலமாக வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எந்தவித சம்பள பிடித்தம் இல்லாமல் ஊதியம் வழங்கப்படுகிறது.

ஆனால் தனியார் பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் பல தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் திறக்காத காரணத்தினால் பெற்றோர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து முதல்வரிடம் வருகிற ஜூலை 6 ஆம் தேதி தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். அதன் பின்னர் பள்ளிகள் திறப்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பீகார், தெலுங்கானா மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது போல தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.