தமிழகத்தில் 12 ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 6 ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கு மொத்தம் 5 தேர்வு மையங்களை அரசு தேர்வுத்துறை அமைத்துள்ளது.

துணைத்தேர்வு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பள்ளிகளில் கடந்த ஓராண்டு காலமாக மூடப்பட்டுள்ளது. இதனால் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கான மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு கடந்த ஜூலை 19 ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்றும் தேர்வு எழுதி இருந்தால் அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்போம் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அரசு கூடுதல் மதிப்பெண்கள் தேவை என்பவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்து. அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. அனைத்து பாடத் தேர்வுகளையும் எழுதுவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், குறிப்பிட்ட பாடத்தேர்வுகளை எழுதுவதற்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 ம் வகுப்பு துணை தேர்வு ஆகஸ்ட் 6 ம் தேதி முதல் தொடங்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.


12 ம் வகுப்பு துணை தேர்வு கால அட்டவணை :

06 .08.2021 – மொழிப்பாடம்

09.08.2021 – ஆங்கிலம்

11.08.2021 – இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி

13.08.201 – வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல்

16.08.2021 – கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ பயாலஜி, டெக்ஸ்டைல் மற்றும் டிரஸ் டிசைனிங்,நியூட்ரிஷியன், புட் சர்வீஸ் மேனேஜ்மென்ட், வேளாண் அறிவியல், நர்சிங்

18.08.2021 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படைஎலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், , அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை

19.08.2021 – கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பயோ கெமிஸ்டரி, ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளியியல்